மூத்திரப் பையைச் சுமந்தபடி என் கடன் பணி செய்து கிடப்பதே என இறுதி மூச்சுவரை சமூக மாற்றத்திற்கான விதைகளை விதைத்தவர் பெரியார். வைதீகப் பாசி படிந்த இந்து சமுதாயத்தினைச் சீர்திருத்த வேண்டும் என்று வாழ்நாள் முழுதும் பாடுபட்டார்.
தமது திராவிட கழகத்தின் குறிக்கோள்கள் எவை என்று 1950-ம் ஆண்டில் அறுதியிட்டுக் கூறியுள்ளார் : “திராவிட இயக்கமானது மத சமுதாயச் சீர்திருத்த அமைப்பு. சமுதாயத்தை இப்போதைவிட, அதிக மனிதாபிமானமும் பகுத்தறிவும் கொண்ட அடிப்படையில் சீர்திருத்தி
அமைக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள். சாதியை அடியோடு ஒழித்துக்கட்டவும் விரும்புகிறது “என்றார் பெரியார்.
கடவுள் இல்லை என்ற கொள்கையை வாழ்நாள் முழுதும் சற்றும்
தளராது பரப்பினார். தீண்டாமை, சாதி வேற்றுமைகள், மூட நம்பிக்கைகள், மடமைச் சடங்குகள் ஆகியவற்றை இவர் கடுமையாக, வன்மையாகக் கண்டித்து அவற்றை விட்டொழிக்கும்படி வலியுறுத்தி வந்தார்.
மத்திய அரசின் ஆதிக்கத்திலிருந்து திராவிட நாடு விடுபட வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வந்தார்.
சோவியத் ரஷ்யாவிற்குச் சென்று வந்தபின் பொதுவுடமைக் கொள்கை மூலம் சமூக மாற்றம் ரஷ்யாவில் சாத்தியமானதைப்
பற்றி பரப்புரை மேற்கொண்டார்.
இன்று பெரியார் இல்லாத காலத்தில் இன்னும் ஆயிரம் பெரியார்கள் பிறக்க வேண்டும் என்பதை உணர்வது
ஒருபுறம். சாதியமும் மதவாதமும் முன்னெப்போதையும் விட அதிகமாகக் கோலோச்சும் யதார்த்த நிலை மறுபுறம். இத்தகைய சூழலில் பெரியாரின் கருத்துக்களை உள்வாங்கி பரப்புரை மேற்கொள்ளவும் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும் காலத்தின் அவசியம்.
(9442145256
– sekematesan@gmail.com)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.