ஒரு சில மாதங்களுக்கு முன் பத்தாம் வகுப்புத் தேர்வுக்குத் தயார்ப்படுத்தும் சிறப்புப் பயிற்சியாளர் ஒருவரது சிறப்புப் பட்டறைக்கு
மகன் நந்தாவை அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன். நிறைய பட்டங்களை வாங்கியவர் அந்த சிறப்பு வகுப்பின் ஆசிரியர். தமிழ் இலக்கணம் முதல் வேதியியல் பாடங்கள் வரை தலைகீழ் மனப்பாடம் அவருக்கு. ஆனால் மாணவர்களை ஊக்கப்படுத்தும் எளிய மந்திரம் மட்டும் சித்திக்கவில்லை... பாவம் மாணவர்கள்! தயங்கித் தயங்கி பதில் சொன்ன மாணவ மாணவியரை நோ .. தப்பு.. வேஸ்ட்.. சரியில்லை... எந்த ஸ்கூல் நீங்க.. இதுகூட சரியா சொல்லிக் கொடுக்கலியா உங்க டீச்சர் என்பதாக கமெண்ட்ஸ்! சரியான விடை சொல்கையில் மடக்கிக் கேட்டு, பாத்தியா டப்பா அடிச்சிருக்கிற... அதுதான் மாட்டிக்கிட்ட..படிக்கணும். ஒழுங்காய்ப் படிக்கணும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். சூத்திரங்களை
மடமட என்று வேகமாக ஒப்பித்துக் கொண்டே போனார். இடையிடையே நான் ஒரு motivation expert ...ஆனா அதுக்கு இங்க நேரமில்ல...என்று வேறு சொன்னார். பத்து நாளில் தேர்வு தொடங்க இருக்கையில் மாணவரிடம் என்ன மொழியில் நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்று அவர் சற்றும் அறிந்திருக்கவில்லை. நான் பேப்பர் செட் பண்ணினா நீங்க எல்லாம் முட்டைதான் வாங்குவீங்க என்பது அவரது கமெண்ட்களில் சூப்பர் கமெண்ட்! Orientation
டிவகுப்பு என்று சொன்னார்கள். ஆனால் எல்லோரையும் disorient பண்ணுவதாகவே அவரது வகுப்பு இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
இறுதியில் நன்றி தெரிவிக்க நான் சென்று ஒரு நிமிடம் பேசினேன். மதிப்பெண்கள் முக்கியமில்லை. ஆர்வத்தோடு படியுங்கள். எல்லாம் அறிந்தவர் யாருமில்லை. ஆனால் கற்கும் ஆர்வத்தை எந்த வயதிலும் விட்டுவிடாதீர்கள். எல்லா மாணவர்களுக்கும் இந்த உலகில் எதிர்காலம் உண்டு. வாய்ப்புகள் உண்டு. மலைவாழை அல்லவோ கல்வி என்கிறார் பாரதிதாசன்.. உற்சாகமாகப் படியுங்கள்.. தேர்வுகளைக் கண்டு அஞ்சாதீர்கள். திறமை மிகுந்த ஆசிரியருக்கு நன்றி. மாணவர்களுக்கு வாழ்த்துகள். பெற்றோர்க்கு பாராட்டுதல்கள் என்று சொல்லி முடித்துக் கொண்டேன்.
நந்தா மிகுந்த ஏமாற்றத்தோடு திரும்பினான்.
எஸ்.வி.வி
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.