நான்
ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் வேலை செய்தே ஆக வேண்டும். எனக்கு வாரத்திற்கு 50
ரூபாய் தருகிறார்கள். ஏதேனும் தவறு செய்துவிட்டாலோ அல்லது வீட்டிற்குப் போக
வேண்டும் என்று கூறினாலோ என்னை அடித்து நொறுக்கிவிடுவார்கள் என்று நடுநடுங்கியவாறு
கூறினான் இம்தியாஸ் அலி. பத்து வயது குழந்தைத் தொழிலாளி அவன். தெற்கு தில்லி
கான்பூர் பகுதியில் ஆடைகளுக்கு பூவேலை செய்திடும் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து
வருகிறான். சாப்பிடுவதற்கு சப்பாத்தியும் கொஞ்சம் சாதமும் கொடுப்பார்களாம். பல
சமயங்களில் காலைஉணவு கிடையாது. காவல்துறையினர் நடத்திய சோதனை ஒன்றில் இவன் மீட்கப்பட்டன்.
இப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு கணக்கு என்றால்
மிகவும் பிரியம். நான் ஒரு பொறியாளராக மாற விரும்புகிறேன் என்று கூறுகிறான்
இம்தியாஸ்.
ஜூன்
12 - குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினமாக அனுசரிக்க வேண்டும் என்று
அறிவித்து 14 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆயினும் குழந்தைத் தொழிலாளர்களின் நிலைமைகளில் மாற்றம்
எதுவும் ஏற்பட்டு விட்டதாகச் சொல்வதற்கு இல்லை. குழந்தைத் தொழிலாளர்கள் மிகவும்
கொடூரமான முறையில் சுரண்டலுக்கும் துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகிறார்கள். இதில் பெண்
தொழிலாளர்களின் நிலைமைகள் இன்னும் மோசம். குழந்தைத் தொழி லாளர்களில் பெரும்பகுதியினர்
பள்ளிப் படிப்பை பாதியிலேயே விட்டவர்கள்தான். மற்றவர்கள் பள்ளிக்கூடத்தின் பக்கமே
செல்லாதவர்கள். செங்கல் சூளைகள், கட்டுமானப் பணியிடங்கள், கல்
உடைக்கும் இடங்கள்,
சாலை போடுமிடங்கள் மற்றும் குழாய் பதிக்கும் இடங்களில்
இவர்கள் வேலை செய்கிறார்கள். இக்கொடுமை களுக்கெல்லாம் முடிவு எப்போது?
(நன்றி
: தீக்கதிர்)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.