அறிவியல் அறிஞரும் எழுத்தாளருமான ஐசக் அஸிமோவ் எதை எழுதினாலும் அதை நுட்பமாக ஆய்ந்தறிந்து எழுதுவதோடு,
அனைவரும் விரும்பிப் படிக்கும் வகையில் எழுதுவதிலும் வல்லவர். அவர் எழுதியுள்ள இன்னொரு குறுநூலே ஆழ்கடல் அதிசயமும்
உண்மையும். இதனை எளிய தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ஐவர் கூட்டணிக்கு (இ.ஹேமபிரபா,
பூ.கொ.சரவணன்,
நா.இரா.கௌதம்,
சூ.அருண்குமார்,
வ.விஷ்ணு) முதலில் நன்றி சொல்லிவிடலாம்.
நமக்குப் புரியாத,
நம்மால் புரிந்துகொள்ள முடியாத எதையும் ஆழமானது என்று சொல்லி விலகிக் கொள்வதில் நாம் படு கில்லாடிகள். அதனால்தான்
புரிந்துகொள்ளவே சற்றும் முயற்சிக்காமல் பெண் மனம் கடலைவிடவும்
ஆழமானது... என்று வசனம் பேசி தப்பித்துக் கொள்கிறோம். தேடல் உள்ள மனங்களுக்கு ஆழம் எதுவும் அதிகமில்லை... என்று சொல்வார்கள். மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும்
சூழப்பட்டிருக்கும் நம் இந்திய திருநாட்டில், கடல் கொந்தளிப்பால்
மூழ்கிப்போன பல ஊர்கள் உண்டு. நம் தமிழ்நாட்டில் தனுஷ்கோடியும் அப்படியாய் மூழ்கிப்போன ஒரு ஊர்தான். கடற்கரையோரமாய் நின்று, மேலேயிருந்து துள்ளிவரும் அலைகளை நாம் எப்போதும்
ரசிக்கின்றோம். கடலில் திமிங்கலம், ஆக்டோபஸ் எனப்படும் நட்சத்திர மீன்கள், கடல் பாம்புகள் இவைகள் மட்டுமா,
இன்னும் பெயர் தெரியாத லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. நாம் உள்ளே உள்ளே என்று கடலுக்குள் போய்க்கொண்டே இருந்தால்,
நாம் வியந்து பார்க்கும் பல்வேறு அதிசயங்களின் புதையலாய் கடல் நம்மைத் திகைக்க வைக்கிறது. கடலில் நம் கண்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல கோடிக்கணக்கான சின்னஞ்சிறு செடிகள் வாழ்கின்றன. அவைகளைப் பற்றிய ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆழ்கடலின்
அதிசயங்களை அரிதினும் முயன்று தொகுத்துத் தந்துள்ள ஐசக்கின் அறிவியல் பணிகளுக்கு மேலுமொரு ரெட் சல்யூட்!
- மு.முருகேஷ் (94443
60421)
ஐசக் அஸிமோவ் விலை : ரூ. 25
யுரேகா புக்ஸ் (044
- 2860 1278)
30/45, பைகிராப்ட்ஸ் சாலை முதல் தெரு,
ராயப்பேட்டை,
சென்னை 600
014
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.