சூரியனை மக்கள் சூரியக்
கடவுள் என்றேதான் முதலில் வழிபட்டார்கள். சூரியனின் வெப்பம் நம்மை அழித்துவிடும்
எனும் அச்சம் நம் மூதாதையர்கள் மத்தியில் மிகுந்திருந்தது. சூரியன் மட்டுமே
அளப்பறிய சக்தி படைத்த கடவுள் என்று எகிப்தில் வாழ்ந்த அரசன் இக்னஹ்டன் பிரகடனப்படுத்தியதோடு, மக்கள் அனைவரையும் சூரியனை வழிபட வேண்டுமென்றும்
ஆணையிட்டான். இது கி.மு. 1370-வாக்கில் நடைபெற்றது.
சூரியக் கதிர்கள்
பூமியில் விழுவதைக் கொண்டே மனிதன் முதன்முதலாக காலத்தைக் கணக்கிடத்
தொடங்கினான். கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் (கி.மு. 384 -322) சூரியனை ஒரு ஈதர்
பந்தாகவும், எவ்வகை எரிபொருளும் தேவையின்றி அது
என்றென்றும் ஒளிவீசக்கூடியது என்றும் நினைத்தார். (ஈதர் எனும் கிரேக்க சொல்லுக்கு ஒளிரும் என்று பொருள்). 1543-ஆம் ஆண்டில்தான் போலந்து
நாட்டைச் சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர் நிகோலஸ் கோபர்நிக்கஸ்
எழுதிய புத்தகத்தில் பூமி சூரியனைச் சுற்றி வருவதாகவும், அது ஏன் சுற்றி வருகிறது என்பதற்கான காரணங்களையும் குறிப்பிட்டு
இருந்தார். 1609-இல் கலிலியோ உருவாக்கிய
சிறிய தொலைநோக்கி வழியே, வானத்தையும் நிலவினையும்
தெளிவாக பார்க்க முடிந்தது. பூமியிலிருந்து சூரியன் சுமார் 92,900,000 மைல்கள் தூரத்தில் இருக்கிறது
என்றும், பூமியின் எடையைப் போன்று 332,900 மடங்கு எடையுடையது என்றும் வானியல் ஆய்வாளர்கள்
கண்டறிந்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளில் சூரியக் குடும்பம்
பற்றியும், அது உருவான காலம் பற்றியும், கதிரியக்கம் பற்றியுமான பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இன்றைக்கு சூரிய ஆற்றல் பற்றிய ஆய்வுகள் சூரிய ஆற்றலிலிருந்து மின்சாரம்
எடுப்பது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐசக் அஸிமோவின்
விறுவிறுப்பான மொழிநடையை ரகுவரன் தமிழிலும் அப்படியே தர
முயன்றுள்ளார். யுரேகா புக்ஸூம் சிறப்பான வடிவமைப்பில், பொருத்தமான படங்களுடன் இந்நூலை வெளியிட்டு, நம் பாராட்டினைப் பெறுகிறது.
- மு.முருகேஷ் (94443
60421)
ஐசக் அஸிமோவ் - யுரேகா
புக்ஸ் (044- 28601278) - விலை : ரூ.35/-
30/45,
பைகிராப்ட்ஸ்
சாலை முதல் தெரு
ராயப்பேட்டை, சென்னை 600 014
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.