வின்னர்
என்ற திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி உண்டு. வடிவேலு பிரசாந்திடம் தான் ஒரு
பெண்ணைக் காதலிப்பதாகக் கூறுவார். உடனே பிரசாந்த் கொன்னுடுவேன். அந்த பெண்ணை நான்
காதலிக்கறேன் என்பார். உடனே வடிவேலு சரி
நீயா இருந்தா என்ன,
நானாக இருந்தா என்ன ? ஆக மொத்தம் அந்தக் குடும்பம் விளங்காமப்
போகணும். அதான் வேணும் என்பார்.
உறவினர்
அல்லது நண்பர்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவராக இருந்தாலும் வருமானம் அவர்களுக்கே
கிடைக்குமாறு ஏற்பாடு செய்து கொள்ள முடியும். ஒருவர் கடையில் தேநீர் குடித்துவிட்டு
வயிற்றைக் கலக்கியதால் அருகே இருந்த கட்டணக் கழிப்பிடத்துக்குள் சென்றார். என்ன
கேவலமான டீ என்று டீக்கடையைத் திட்ட அதற்குக் கழிப்பிடக்காரர் என் மகனுடைய கடைதான்
அது என்றாராம். கழிப்பறையும் மோசமாக இருக்கவே வந்தவர் இங்கு வந்ததற்கு என்
புத்தியைச் செருப்பால் அடித்துக் கொள்ள வேண்டும் என்றார். கழிப்பிடக்காரர் நாலு
கடை தள்ளி என் இரண்டாவது மகன் செருப்புக் கடை வைத்திருக்கிறான். அங்கு
வாங்குங்களேன் என்று கூலாகச் சொன்னாராம்.
ஒரு
ஆங்கிலச் சிறுகதை உண்டு. ஒரு ஊரில் பாம்பு என்று ஒரு பத்திரிகை இருக்கும். சுமாரான
விற்பனைதான். சிலகாலம் கழித்து கீரி என்றொரு பத்திரிகை வெளிவந்து பாம்பு
பத்திரிகையைக் கிழிகிழி எனக் கிழிக்கத் தொடங்கியது. பதிலுக்குப் பாம்பு
பத்திரிகையும் கீரியைக் கிழிகிழி எனக் கிழிக்கத் தொடங்கியது. மக்கள் இரு பத்திரிகைகளையும்
ஆர்வத்துடன் வாங்கிப் படித்தனர். ஒரு கட்டத்தில் தாக்குதல் மிகவும் தரம் தாழ்ந்து போனது.
அந்த ஊரின் பாதிரியார் இரண்டு பத்திரிகைக்கும் சமாதானம் செய்து வைக்க அவர்களை அழைத்தார்.
கூட்டத்திற்கு ஒரு பத்திரிகையின் ஆசிரியர் மட்டுமே வந்திருந்தார். இன்னொரு பத்திரிகையின்
ஆசிரியர் வரவில்லையா எனப் பாதிரியார் கேட்டதற்கு நான்தான் அந்தப் பத்திரிகைக்கும்
ஆசிரியர் என்பார். பாதிரியார் மயங்கி விழுந்து விட்டார்.
மருத்துவத்துறையில்
இதுபோன்ற ஜோடிப் பொருத்தம் பொதுவாக டாக்டர்-நர்ஸ், அறுவை சிகிச்சை மருத்துவர்-
மயக்க மருந்து நிபுணர் என்று ஆபத்தில்லாதவைகளாக இருக்கும். சில சமயம் மருத்துவர்- ஆம்புலன்ஸ்
ஓட்டுநர், அறுவை சிகிச்சை நிபுணர்- போஸ்ட் மார்ட்டம் நிபுணர் என்றெல்லாம் விபரீதக் கூட்டணிகள்
அமைந்துவிட நேரிடும்.
இன்னொரு
வடிவேலு காமெடியில் ஒரு பாட்டி தெருவில் போகிறவர்களை ஒரு வெறிநாயை ஏவி கடிவாங்க
வைத்துப் பின் அருகில் நாய்க்கடி ஊசி போடும் டாக்டரிடம் கமிஷன் வாங்குவது நினைவிருக்குமே?
ஒரு
டாக்டர் தனக்கு வரும் எல்லா நோயாளிகளிடமும் புரோட்டா சாப்பிடுங்கள் என்று ஆலோசனை கூறிக்
கொண்டிருந்தார். புரோட்டா ஆரோக்கியமான உணவு இல்லையே என்று அவரிடம் கேட்டதற்கு என்ன
செய்ய.. என் தம்பி புரோட்டா கடைதானே வைத்திருக்கிறான் என்றாராம்.
ஒரு
மருத்துவர் இருந்தார். அவர் குழந்தைப் பேறின்மை சிகிச்சை நிபுணர். அவரது மனைவி ஒரு
மகப்பேறு மருத்துவர். அவர் என்னிடம் எங்களை அழைக்கும் எல்லாத் திருமணங்களுக்கும் நாங்கள்
சென்று விடுவோம். பெரும்பாலும் என் மனைவியிடம் அழைத்து வருவார்கள். இல்லையென்றால்
என்னிடம் அழைத்து வருவார்கள். எப்படியோ எங்கள் இருவரில் ஒருவருக்கு கேஸ் நிச்சயம்
என்று சொன்னார்.
இப்பொழுதெல்லாம்
மருத்துவர்கள்,
மருத்துவமனைகள் மீது வழக்குகள் அதிகம் தொடரப்படுவதால் மருத்துவர்கள்
வழக்கறிஞர் ஜோடியே எதிர்காலத்தில் வெற்றிகரமான கூட்டணியாக இருக்கக் கூடும்.
என்போன்ற
மனநல மருத்துவர்கள் ஏகப்பட்ட மனநோயாளிகளை உருவாக்கும் கல்வி
நிறுவனங்களுடன்
கூட்டு சேர்ந்தால் அசைக்க முடியாத ஜோடியாக விளங்க வாய்ப்புக்கள் அதிகம்.
புதிய
ஆசிரியன் போன்ற பத்திரிகை ஆசிரியர்கள் முன்பெல்லாம் பேப்பரை எடைக்குப் போடும் கடைகளுடன்
கூட்டணி வைத்திருந்தனர் (வரும் கதைகள் கவிதைகளையெல்லாம் விலைக்குப் போட).
இப்பொழுதுதான் எல்லாமே ஈமெயிலில் வருகிறதே.. இது போன்ற கட்டுரைகள் வருவதால் தலைவலி
மருந்து நிறுவனத்துடன் வேண்டுமானால் கூட்டணி வைக்கலாம்.
9443321004
– ramsych2@gmail.com
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.