பெரணமல்லூர்
சேகரன்
காலச்
சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. மனித சமூக மேன்மைக்காக மேதினியில் தோன்றி மகோன்னதங்களைப் பலர் புரிந்து
வருகின்றனர். அத்தகைய வரிசையில் முதலிடம்
பிடிப்பவர்கள் அறிவியல் அறிஞர்கள் எனலாம். அவர்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க
வேண்டியுள்ளது. வங்க மண்ணில் தோன்றிய அறிவியல் அறிஞர் ஜகதீச சந்திர போஸைப் பற்றி
இங்கே பார்ப்போம்
“நான் தாய்மொழிப் பள்ளியில் படித்ததால்தான், மொழிப் பற்றையும், இலக்கிய
அறிவையும் பெற்றேன்;
உயர்சாதி, கீழ்சாதி என்ற வேற்றுமை உணர்வுக்குப்
பலியாகாமல் சமத்துவத்தைப் பயின்றேன் என்றார் ஜெ.சி.போஸ். 1895ஆம்
ஆண்டு ஆகஸ்டில் கல்கத்தா மாநகராட்சி மண்டபத்தில் வங்காள கவர்னர் தலைமையில்
கூடியிருந்த மக்கள் முன்பு,
கம்பிகள் துணையின்றி பொருள்களைக் கடந்து செல்லும் தன்மை
பெற்றது மின்சாரம் என்பதை அவர் நிரூபித்தார். இலண்டன் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர்
ஆப் சயின்ஸ் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. இயற்பியலில் சாதனை படைத்த போஸ்
தாவரவியலிலும் வரலாறு படைத்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற மாநாட்டில் விலங்குகளைப்
போலவே தாவரங்களுக்கும் உணர்ச்சியுண்டு.. தாவரங்களுக்கும் நரம்பு மண்டலமுண்டு..
கள்ளும் சாராயமும் தாவரங்களையும் பாதிக்கின்றன...பயிர்கள் வெப்பம், ஒலி, ஒளி, குளிர்
ஆகியவற்றை உட்கிரகிக்கின்றன” என்று உரையாற்றினார். நிரூபித்தும்
காட்டினார்.
விஞ்ஞான
கண்டுபிடிப்புகள் சமூகத்திற்குப் பயன்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக்
கொண்டிருந்த,
தாய்மொழிவழிக் கல்வியைப் போற்றிய இந்த மாபெரும்
விஞ்ஞானியைக் கொண்டாடுவோம்.
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.