கல்வி
உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் மாற்று கல்விக் கொள்கைக்கான மாநில
மாநாடும், வரைவு சாசனம் வெளியீட்டு நிகழ்ச்சியும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் என்.மணி
தலைமையில் 2016 அக்டோபர் 8 அன்று சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. கூட்டமைப்பின் நிதிக் காப்பாளர்
மோசஸ் வரவேற்றார். இந்த வரைவு அறிக்கையை கேரள அரசின் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி
வெளியிட, ஆந்திர மாநில சட்ட மேலவை உறுப்பினர் வி.பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.
தற்போது
கூட்டமைப்பில் 40 சங்கங்கள் இணைந்துள்ளன. மேலும் சில சங்கங்கள் இணைய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் முன்னணி கல்வியாளர்கள் உரையாற்றினர். ஆசிரியர்கள், மாணவர்கள்
திரளாகக் கலந்து கொண்டனர்.
மாநாட்டில்
வெளியிடப்பட்ட ”மாற்றுக் கொள்கைக்கான மக்கள் சாசனம்” என்ற 64 பக்க நூலினை அனைத்து
ஆசிரியர்களும் பெற்றோர்களும் படித்துப் பார்க்க வேண்டியது அவசியம்.
18 வயது வரை அனைத்துக்
குழந்தைகளுக்கும் இலவசக் கல்வி வழங்க வேண்டும், குடியிருப்புகளுக்கு
அருகாமையில் சமச்சீர்க்கல்வியை அரசே வழங்க வேண்டும், கல்வி வணிகமயமாவதை
தடுத்து நிறுத்த வேண்டும்,
8வது வகுப்பு வரை எந்தக் குழந்தையையும் வடிகட்டாமல் மேல்வகுப்புக்குச்
செல்ல அனுமதிக்க வேண்டும்,
தாய்மொழிக் கல்விக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும், கல்வியில்
சமஸ்கிருதத் திணிப்புகாவியமயத் திணிப்பு-குலக்கல்வித் திட்டம் ஆகிய
சமூகநீதிகளுக்கு எதிரான முயற்சிகளைக் கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகள் மாநாட்டில்
வலியுறுத்தப்பட்டன.
தமிழகக்
கல்வி வரலாற்றில் இது முக்கியத் திருப்புமுனை என்பதில் ஐயம் இல்லை.
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.