தேவகோட்டை
சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளின்
புத்திக் கூர்மையை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சி நடைபெற்றது. கூட்டத்தில் ஆசிரியர்களும்
மாணவர்களும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். இராமநாதபுர மாவட்டம், அபிராமம்
கிராமத்தைச் சேர்ந்த மொழிப்பிரியன் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். அவரது
மகன் அக்ரம். பத்து வயதே ஆகியுள்ள இச்சிறுவன், உலக இளம் வயது தட்டச்சு
சாதனையாளன் (World’s youngest multilingual typist) என்ற பரிசைப்
பெற்றுள்ளான். தனது 7
வயது முதல் பல்வேறு மொழிகளைக் கற்று வந்துள்ளான். தற்போது இஸ்ரேல்
நாட்டில் படித்து வருகிறான். நானூறு மொழிகள் அறிந்தவன். அந்த மொழிகளின் பெயர்களை மூன்றே
நிமிடத்தில் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான். நீங்க எப்படி இருக்கீங்க? நான்
நல்லா இருக்கேன் என்பதை நாற்பது மொழிகளில் பேசிக் காட்டினான். தேவகோட்டை என்கிற வார்த்தையை
நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் எழுதிக் காண்பித்து அசத்தினான். குழந்தைகளின்
புத்திக் கூர்மையை மேம்படுத்துவது தொடர்பாக மூளைக்குப் பயிற்சி அளிக்கும்
இருபத்தைந்து வழிமுறைகளை செய்து காண்பித்தான். கேழ்வரகு, சாமை, கம்பு, சோளம், குதிரைவாலி
போன்ற இயற்கை உணவுகளையும் பழங்களையும் சீதாப்பழம், கொய்யா, சப்போட்டா
போன்ற பழங்களையும் உண்பதால் தனக்கு எந்த வியாதியும் இதுவரை வந்தது கிடையாது என்றும்
மொழி வல்லுநராகி அனைவருக்கும் பல்வேறு மொழிகளைக் கற்று தரவேண்டும் என்பதே எனது
குறிக்கோள் என்றும் தெரிவித்தான். சிறு வயதிலேயே மொழி ஆற்றல் மிக்கவனாக வளர்ந்து
நின்ற அவனைப் பார்த்து நாங்கள் அனைவரும்
பிரமித்துப் போனோம்.
(மொழிப்பிரியனுடன்
தொடர்பு கொள்ள : 97899
60549)
லெ.சொக்கலிங்கம்
(தலைமை ஆசிரியர் - 9786113160)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.