சூரிய
ஒளியைக் கண்டு மனிதர்கள் பயந்த காலங்கள் எப்போதோ மலையேறிவிட்டன. சூரிய ஒளியின் ஆற்றலை, சிறப்பைக்
கண்டறிந்து, அதனைப் பல்வேறு ஆய்வுகளின் வழியாக எப்படி
பயன்படுத்துவது என்பதற்கான ஆராய்ச்சிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. சூரிய
வெப்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை நாம் முன்னிலும் சிரத்தையோடு செய்ய
வேண்டிய காலமிது.
நம்மை
விடக் குறைவாக சூரிய வெப்பம் கிடைக்கும் நாடுகள், நம்மை விட அதிகமாக சூரிய
ஆற்றலைப் பயன்படுத்துகிறார்கள். பூமியிலிருந்து சூரியன் சுமார் 15
கோடி கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்தாலும், சூரிய
சக்தியினால்தான் பூமியில் உயிர்கள் இயங்கிக்
கொண்டிருக்கின்றன.
கி.மு.230-இல்
கிரேக்க கணித ஆய்வாளரான டோசிதெஸ் என்பவர் குவிப்பான்கள் மூலமாக சூரிய ஆற்றலை
ஓரிடத்தில் குவிக்கும் முயற்சியை மேற்கொண்டார். இப்படியாய்த் தொடங்கிய சிறுசிறு முயற்சிகளின்
தொடர் விளைவாக,
இன்று சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி, பல்வேறு
பணிகள் நடைபெறும் அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளோம். பூமியிலிருந்து மட்டுமல்ல, நேரடியாக
விண்வெளியில் இருந்தே சூரிய ஆற்றலை நுண்ணலைகளாக மாற்றி, பூமிக்கு
அனுப்பி, இங்கே அதை மின்சாரமாக மாற்றிப் பயன்படுத்துவதற்கான விண்வெளி சூரிய சக்தி
நிலையத்தின் தொடர் ஆராய்ச்சிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூரிய
ஆற்றலின் ஆய்வுகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டி அறிவியல் அறிஞர் ஐசக் அஸிமோவ் எழுதியதே
இந்நூல். ஹேமபிரபா,
சரவணன், கௌதம், அருண்குமார், விஷ்ணு
ஆகியோர் எளிமையாய் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்கள்.
-மு.முருகேஷ்
(9444360421)
ஐசக்
அஸிமோவ் - யுரேகா புக்ஸ் (044-28601278)
விலை : ரூ.25
30/45 பைகிராப்ட்ஸ் ரோடு முதல் தெரு, ராயப்பேட்டை, சென்னை
– 14
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.