செப்டம்பர்
இதழில் இரோம் ஷர்மிலா ராணுவத்தின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மணிப்பூரை
விடுவிக்கட்டும் என வாழ்த்திருந்தீர்கள். சுதந்திரப் போராட்டத்தின்போது மகாத்மா
காந்தி உண்ணாவிரதத்தை ஒரு போராட்ட உத்தியாகப் பயன்படுத்தினார். அன்று, அவர்
உண்ணாவிரதமிருந்தபோது,
அவரது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க பிரிட்டிஷ் அரசு கூட தயாராக இருந்தது; மக்களும், முழு
ஒத்துழைப்புக் கொடுத்தனர்.
ஆனால், இன்று
காந்தி காட்டிய வழியில் மணிப்பூரில் இரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தில்
ஈடுபட்டபோது அவரது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர, எந்த
விதமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, அவர்மீது
தற்கொலை வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்து, மருத்துவமனையில்
அடைத்து திரவ உணவளித்து எப்படியோ உயிரோடு வைத்திருந்தார்கள். பதினாறு ஆண்டுகளில்
ஒரு துளி தண்ணீர் கூட அவர் நாவை நனைக்கவில்லை. அவரது இளமைக்காலத்தின் பெரும்பகுதி
இப்படிக் கழிந்தது. 2016 ஆகஸ்ட் 9 அன்று அவர் உண்ணாவிரதத்தை நிறுத்தியபோது, அவரது முடிவுக்கு பல
எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அப்படி என்றால் என்ன அர்த்தம்? இப்படியே
இருந்து இறந்து போ என்பதுதானே? தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தினால், காவல்
துறையினரின் உதவியுடன்,
கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்படுகிறது.
பிரச்சனைகளைத்
தீர்க்க ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்கிறார்கள். உண்மைதான், ஒப்புக்கொள்வோம்.
ஆனால், அமைதியாக,
அறவழியில் இராம் ஷர்மிளா போன்றோர் லட்சிய வெறியுடன், ஆண்டுக்கணக்கில்
உண்ணாவிரதம் இருக்கின்றபோது, பிரச்சனைக்குத் தீர்வு காணாமல், ஆணவம்
பிடித்த அரசு இடித்துவைத்த புளி போல் இருந்தால் என்னதான் செய்வது? இதற்குத்
தீர்வுதான் என்ன?
காந்தியை தேசத்தந்தையாகக் கொண்டாடுவதற்கு நமக்கு என்ன
அருகதை இருக்கிறது?
ஒன்றும் புரியவில்லை!
பேரா.சாமுவேல்
லாரென்ஸ்,
மதுரை
(99407
52852)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.