தாத்தா
பேரனிடம் கூறினார்.
”கண்ணா, காசைக் கருத்துடன் செலவழிக்கணும். எந்தப் பொருளுக்கும் நியாய விலையைவிட அதிகக்
காசு கொடுக்கக்கூடாது. பணத்தின் அருமை தெரியணும். காலம் பொன்னானது; எதையும்
வேஸ்ட் பண்ணாதே” என்று அறிவுரைகளை அள்ளித்
தெளித்தார்.
பேரனோ
”அட போங்க தாத்தா.. இன்று, வேஸ்ட்
இல்லாம வாழவே முடியாது. பணம் வேஸ்ட், எனர்ஜி வேஸ்ட், டைம்
வேஸ்ட் எல்லாம் வாழ்வின் அங்கம்”
என்று பொன்மொழி உதிர்த்தான்.
எப்படி
என்று வினவிய தாத்தாவுக்கு பேரனின் பதில் :
“காலை எழுந்ததும் ஃப்ரிட்ஜைத் திறந்தால், இரவு முழுதும் கரண்ட் இல்லாம
பால் பாக்கெட் கெட்டுப் போயிருக்கும். ரூ 40/- வேஸ்ட். ஆபீஸ் கிளம்பி
பஸ்ஸுக்கு நின்றால்,
நம்முடைய பஸ் நம்பர் தவிர மற்ற பஸ்கள் படையெடுக்கும்.
நேரத்துக்கு ஆபீஸ் போகணுமே என்ற கவலையில் ஆட்டோ பிடிப்போம். பின்னாலேயே நம்முடைய
நம்பர் பஸ் இரண்டு அடுத்தடுத்து வந்து வயிற்றெரிச்சலைக் கிளப்பும். ஆறு ரூபாய்
சவாரிக்கு அறுபது ரூபாய் கொடுத்திருப்போம். வேறு வழி? ஆறு
மனமே ஆறு.. நேரத்தில் ஆபீஸ் சென்றோமா என்றால் அதுவுமில்லை. தொழிலாளர் நல அமைச்சர்
உழைப்பாளர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகிறார் என்று இரண்டு கிலோமீட்டருக்கு
டிராபிக் ஜாம் ஆகியிருக்கும். எட்டாவது மாடியிலிருக்கும் ஆபீசுக்கு லிப்ட்டில் செல்ல
கீழ்தளம் சென்றால்,
லிப்ட் அவுட் ஆப் ஆர்டர் வாசகம் தொங்கும். பிறகென்ன, வேர்த்து
விறுவிறுத்து,
மூச்சு முட்ட எட்டு மாடி ஏறி, லன்ச் பாக்ஸ்-ஐத்
திறப்போம். மணி ஒன்று ஆகிவிட்டதே... அரை நாள் லீவு லெட்டர். அரை நாள் லீவு போச்சு!
வேலை
முடிந்ததும் மாலை,
டென்ஷனால் ஏற்பட்ட தலைவலியால், டாக்டரிடம்
போவோம். சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்து, பிறகு, ஒன்றுமில்லை
சார்... மூச்சுப் பயிற்சி பண்ணுங்க, வருவது வரட்டும்னு எப்போதும்
ரிலாக்ஸ்ட் ஆக இருங்க என்று அட்வைஸ் செய்து, பாராசிட்டமால் ஒரு மாத்திரை
போதும் என்பார். ரூ. 6301/-
தண்டம் அழுதிருப்போம். ( ரூ 300
கன்சல்டேஷன் + ரூ. 6000 சிட்டி ஸ்கேனுக்கு + ரூ 1 பாராசிட்டமாலுக்கு ).
மறுநாள்
எழுந்ததும் முந்தைய நாள் நிகழ்வுகள் அனைத்தும் மறந்து நிம்மதியாய் அடுத்த நாளைத் துவக்குவோம். அடுத்த வாரம்
சுற்றிப் பார்க்க சிம்லா போகப்போகிறோம் என்ற மகிழ்ச்சியை நினைத்து. மறுநாள் ஆபீஸ்
போனதும், சிம்லா பயணத்துக்கு வேட்டு வைக்கப்பட்டிருக்கும். எம்.டி. விசிட் இருப்பதால்
லீவு கிடையாது என்பார் மானேஜர். 10000 ரூபாய் செலவில் செய்யப்பட ரிசர்வேஷளைக்
கேன்சல் செய்ய ரூ. 500 தெண்டம்.
அதனால்
தாத்தா.. இன்றைய வாழ்க்கையில் வேஸ்ட் ஒரு முக்கியமான அங்கம். தவிர்க்கவே முடியாது.
30 பர்சென்ட் சம்பளம் வேஸ்ட்டை எதிர்கொள்ளத்தான்” என்றான்.
தாத்தா
ஒத்துக்கொள்ளவில்லை. ”என்னதான் இருந்தாலும், கொஞ்சம்
திட்டமிட்டு வாழ்ந்தால் வேஸ்ட்-ஐத் தவிர்க்கலாம்” என்றார்.
பேரன்
கடுப்பாகி, ”இதுதான் தாத்தா... உங்க பாலிசியெல்லாம் இன்றைய நடைமுறைக்கு ஒத்துக்காது.
உங்ககிட்ட இதுவரை பேசியதே டைம் வேஸ்ட்” என்று நடையைக் கட்டினான்.
- எஸ்.
தேவநாதன், குரோம்பேட்டை
(கைபேசி: 9380696474)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.