தேர்வுகள் முடிந்த நிலையில் அப்பகுதி மாணவர்கள் ஒன்றுகூடி கிரிக்கெட், கால் பந்தாட்டம், டென்னிஸ் என அவரவர் விருப்பத்துக்கு
அருகில் இருந்த மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
மாலை வரை விளையாடிக்கொண்டிருந்தவர்கள். இருள் கவியத் தொடங்கியதும் விளையாட்டை முடித்துக்கொண்டு ஆலமரத்தடியில் ஒதுங்கி தண்ணீர் பாட்டில்களைத் திறந்து குடிக்க ஆரம்பித்தனர். கூடவே பேச்சையும்.
“டேய், ரமேஷ்.. பக்கத்து தெருவுல புதுசா ஒருவர் குடி
வந்திருக்காருடா.
அவர் சொல்றது அப்படியே பலிக்குதாம். நிறைய பேர் அவர்கிட்ட போறாங்க”. என்றான் மகேஷ்.
“அதெல்லாம் டுபாக்கூர்டா.. “என இடைபுகுந்தான் ஆனந்தன்.
“அதெப்படி நீ சொல்லலாம்?” என லேசாய் கடுப்பானான் மகேஷ்.
“சரி, இப்ப நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க. நாம எல்லோரும் எக்ஸாம் எழுதி
இருக்கோம். ஒரு பத்து பேரை அழைத்து நான் அவர்களிடம் தனித்தனியாக, நீ இந்த வருடம் பாஸாகி விடுவாய்” என்று சொல்றேன்.
அவர்களில் எட்டு பேர் பாஸாகி விடுகிறார்கள். அவர்கள் எல்லோரும், “அட, சுரேஷ் சொன்னது அப்படியே பலிச்சிருச்சே..” என அதிசயப்படுவார்கள்.
ஃபெயில் ஆன அந்த இரண்டு பேர் பற்றி கவலை இல்லை. பாஸான அந்த எட்டு பேர் மட்டும் போதும் என் புகழைப் பரப்ப.
அப்புறம் என்ன ஐயா படு ஃபேமஸ்தான்.”
சற்று நேரம் அமைதி நிலவியது. மகேஷுக்கும் இதற்கு கவுண்டர் கொடுக்க முடியவில்லை.
“ஆமாண்டா, ஆனந்தன் சொல்றது சரிதான். பரீட்சையில் பாஸாவது நம்ம கையில்தான் இருக்கு. எவ்வளவுக்கெவ்வளவு படிக்கிறோமோ அதை வைத்துத்தான் தேர்வில் நம் வெற்றியும், தோல்வியும் இருக்கும். யாரோ வந்து எதையோ சொல்லிட்டதினாலே
அது மாறிடாது” என்றான் சித்தார்த்.
சித்தார்த் சொல்வது சரிதான் என்பதை ஏற்பதுபோல் மற்றவர்கள் அமைதியாயினர்
Malarmathi786@gmail.com
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.