Sunday, August 13, 2017

அசத்தும் அரசுப்பள்ளி - மணிகண்ட பிரபு


திருப்பூர் வடக்கு பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் ஐநூறு மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் 260 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பட்டுலிங்கம் தலைமை வகித்து, காமராஜர் முகமூடி அணிந்த மாணவ மாணவிகளின் பேரணியைத் துவக்கி வைத்தார். காமராஜரின் பெருமைகளை விளக்கும் விதமாக பதாகைகளை ஏந்தி பள்ளி மாணவர்கள் பூலுவபட்டி பகுதிகளில் ஊர்வலம் வந்தனர்.

இந்த ஆண்டு அரசு துவக்கப்பள்ளியில் புது விதமாக, ஆசிரியர்கள் முயற்சியாலும், பெற்றோர்களின் ஒத்துழைப்பாலும் முதன்முறையாக விளையாட்டுச் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஒன்றாம் வகுப்பு-சிவப்பு / இரண்டாம் வகுப்பு-நீலம் / மூன்றாம் வகுப்பு-பச்சை / நான்காம் வகுப்பு-மஞ்சள்/ ஐந்தாம் வகுப்பு- ஆரஞ்சு வண்ணங்களில் சீருடை வழங்கப்பட்டுள்ளது.

பிரதி வெள்ளிதோறும் விளையாட்டுச் சீருடை அணிந்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய சீருடை பெற்றோர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.விரைவில் ஐந்து வகுப்பிற்கும் தொடுதிரையுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பு துவங்க உள்ளது.


மணிகண்டபிரபு (9942887500)

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.