சாலைவிபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில்தான்
அதிகமாக இருப்பதாக புள்ளிவிபரங்கள்
தெரிவிக்கின்றன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அறிக்கையின்படி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் சுமார் 15ஆயிரம் கி.மீட்டர் நீளத்துக்கு
மேல் உள்ளன.
இந்த சாலைகளில் கிராமப்புற சாலைகளைத் தவிர்த்து நம் நாட்டில் சாலை விபத்துகளில்
சராசரியாக நாள் ஒன்றுக்கு 43 பேர் உயிர் இழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2015-ம் ஆண்டு நாடு முழுவதும் நடந்த
சாலை விபத்துகளின் எண்ணிக்கை
5,01,423
எனவும் இது கடந்த 2014ம் ஆண்டில் நிகழ்ந்த விபத்துகளைக் காட்டிலும் 2.5 சதவீதம் அதிகம் எனவும் புள்ளி
விபரங்கள் வெளிப்படுத்துகின்றன.
2015-ல் தமிழகத்தில் 69,059 வாகன விபத்துகளும் அதன் மூலம் 15,642 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. 2014-ல் 15,176 பேர் இறந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும்
நிகழ்ந்த விபத்துகளில் 886 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 245 பேரும் திருச்சியில் 161 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் நாள்தோறும் சராசரியாக 1,214 சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இதில் 25 சதவீதம் இருசக்கர வாகனங்களால் நிகழும் விபத்துகள்.
இவைகளில் அதிக அளவிலான விபத்துகள் சாலை சந்திப்புகளில் நிகழ்கின்றன. இந்த
பின்னணியில்தான் நாம் ஆண்டுதோறும் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடித்து வருகிறோம். இருப்பினும் விபத்துகளின்
எண்ணிக்கையும் அதன் விளைவாக
ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்தபாடில்லை.
சாலைகளின் அதிவேகமாக செல்வது,
வாகனங்களை அலட்சியமாக ஓட்டுவது,
மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுவது, போதுமான பயிற்சி இல்லாமல் ஓட்டுவது போன்றவைகள்தான் காரணம்
என்று முதல் தகவல் அறிக்கை
(எப்.ஐ.ஆர்) மருத்துவ அறிக்கை குற்றப்பத்திரிக்கை மற்றும் சட்ட ஆவணங்கள் உள்ளிட்ட அறிக்கை தெரிவிக்கின்றன.
அன்றாடம் நடைபெறும் சாலை விபத்துகளில் மரணம் அடைபவர்கள் 71 சதவீதத்திற்கும் அதிகமானோர் சாலைகளில் நடந்து செல்பவர்கள்தான். இதனால் சாலை வடிவமைப்பு முறைகளில் அரசு கவனம்
செலுத்தவேண்டும் என
காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் கருத்து தெரிவிக்கின்றனர். பெரும்பாலான எப்.ஐ.ஆர் ஆவணங்களில் கவனக்குறைவு காரணமாக விபத்துகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளி விபரங்களில் வெளிவந்துள்ள இன்னொரு முக்கியமான அம்சம் தமிழகம்
முழுவதும் ஆய்வு செய்ததில் பதிவு செய்யப்பட்ட விபத்துகளை ஆய்வு செய்வதற்கான விபத்து பதிவேடு எங்கேயும் இல்லை என்பது.
இப்படி நாடு முழுவதும் நடைபெறும் சாலை விபத்துகள் குறித்து உச்சநீதிமன்ற குழுவின்
தலைவர் நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனுக்கு
இது தொடர்பாக கடிதம்
எழுதியுள்ளார். அதில் சாலைப் பாதுகாப்பு விஷயத்தில் நாம் நீண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது. சாலை பாதுகாப்பு
தொடர்பான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். இது தொடர்பாக காலாண்டுக்கு ஒரு முறை உச்சநீதிமன்ற குழுவிடம் உரியவாறு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். சாலை விதிகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு பறிமுதல் செய்வது என
தமிழக அரசு
முடிவு செய்திருக்கிறது. மக்கள் திருந்துவார்களா?
- தொடர்புக்கு : 94421 26516
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.