தேவகோட்டை சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெறும் பல்வேறு சமுதாய முன்னேற்றம் ஏற்படுத்த கூடிய கல்வி தொடர்பான நிகழ்வுகளை ஊடகங்களில் படித்து, பள்ளியைப் பாராட்ட விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சாலை மறைகுளம் ஊரிலிருந்து பல ஊர்களைத் தாண்டி ராமமூர்த்தி என்பார் குடும்பத்துடன் பள்ளிக்கே வருகை
தந்து பாராட்டு தெரிவித்தார்.
இது தொடர்பாக ராமமூர்த்தி கூறியதாவது : கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி தொடர்பாக பத்திரிகையில் வெளியான கட்டுரைகள் படித்தேன். இளம் வயது மாணவர்களை
காவல் நிலையம், வங்கி,
அஞ்சலகம்,
அறிவியல் கல்லூரி, தோட்டக்கலைப் பண்ணை என அனைத்து வாழ்வியல் இடங்களுக்கும் களப்பயணம் அழைத்துச் சென்றதும்,
ஒரு கல்வி ஆண்டில் 75 ஆளுமைகள் வந்து மாணவர்களிடம் கலந்துரையாடியதும் கண்டு வியந்து போனேன். மேலும் அங்கே சத்துணவில் புதிய முறையைக் கையாளுவது தொடர்பாகவும் படித்தேன். இந்த பள்ளியை நேரில் போய்ப் பார்த்து பள்ளித் தலைமை ஆசிரியரையும் பிற ஆசிரியர்களையும் பாராட்டிச் செல்ல விரும்பினேன்.
எங்கள் ஊரில் இருந்து காலை 8.30 மணிக்கெல்லாம் கிளம்பி சுமார் 150 கிலோமீட்டர் பயணம் செய்து 11.30 மணியளவில் எங்கள் வாகனத்தில் என்னுடன் எனது மனைவி, மகள், எனது உறவினர்கள் ஆக பெரியவ பேருமாக பள்ளிக்குச் சென்றோம். பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் எங்களை இன்முகத்துடன் வரவேற்றார்.
நான் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு எங்களது கிராமத்தில் முடங்கிக் கிடந்தபோது,
காரியாபட்டி பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றிய போஸ் பாண்டியன் மற்றும் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் தூண்டுதலின் பேரில் தமிழக அரசின் அறிவொளி இயக்கத்தில் சேர்ந்து தீவிர
பயிற்சி பெற்றேன்.
அதன் விளைவாகவே இன்று அரசுப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியில் உள்ளேன். எனது மகள்களில் ஒருவர் நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் படிக்கிறார். இன்னொருவர் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு படித்து
வருகிறார்.
20 வருடங்கள் கல்லூரி வரை படித்த பிறகு எனக்கு கிடைத்த தூண்டுதலை இந்தப் பள்ளியில் இரண்டாம்,
மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்
முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி யோடு மேடையில் பேசும் கலையையும் கொடுத்து வளர்த்து வருகிறார்கள். கண்டிப்பாக சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு இந்தப் பள்ளியில்
படிக்கும் மாணவர்கள் மிக பெரிய ஆளுமைகளாக வருவார்கள். மிக இளம் வயதில் இறையன்பு ஐ.எ.எஸ்., நந்தகுமார் ஐ.ஆர்.எஸ். போன்ற பல ஆளுமைகளை இந்த மாணவர்கள் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மேலும் பல்வேறு மையங்களுக்கு களப்பயணம் செல்ல வாய்ப்பு கிடைப்பதால் மாணவர்கள் ஏராளமான விசயங்களை
நேரடியாகத் தெரிந்து கொள்கின்றனர். அனைத்து மாணவர்களும் சாப்பிடும் வண்ணம் சுவையான சத்துணவு அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் பள்ளி நிர்வாகத்துக்கும், தலைமை ஆசிரியருக்கும், பிற ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிறகு அவர் மாணவர்களிடம் கலந்துரையாடினார். விருதுநகர் மாவட்டத்திலிருந்து சுமார் 150
கிலோமீட்டர் பயணம் செய்து தங்கள் பள்ளிக்கு வாழ்த்து தெரிவிக்க வந்துள்ள ராமமூர்த்தி குடும்பத்துக்கு தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் நன்றி தெரிவித்தார். அவர்களது வருகை தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்ததையும் குறிப்பிட்டு நெகிழ்ந்தார்.
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.