வெளியீடு : தமுஎகச மானாமதுரை கிளை, 10 குலாலர் தெரு, மானாமதுரை 630 606 விலை ; ரூ. 80
எழுத்தாளர் செல்வகதிரவன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு `பார்த்த முகங்கள்’ இருபத்தி மூன்று
சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது.
இச்சிறுகதைகள் சமுதாயத்தை
பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்துகின்றன. கதைக்களங்கள் பெரும்பாலும் மானாமதுரை
மற்றும் அதனைச்சுற்றியுள்ள
பகுதிகளாகவே காட்டப்பட்டுள்ளதும் கதையாசிரியரின் இயல்பான கதை சொல்லும் உத்திக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. கதைகளின் அளவான நீளம்
கதையாசிரியரின் கதை சொல்லும் நேர்த்தியை எடுத்துக் காட்டுகிறது. பெரும்பாலான
கதைகளின் கதை மாந்தர்கள் நேரடியாக உரையாடுவதால், தேவையற்ற வார்த்தை மற்றும் வர்ணனைப் பிரயோகங்களை
கதையாசிரியர் தவிர்த்திருப்பது சோர்வின்றி வாசிக்க வாசகர்களுக்கு உதவுகிறது.
ஓவ்வொரு கதைக்கான கருவையும் நமது அன்றாட வாழ்க்கையில் நிகழ்வனவற்றிலிருந்து தேர்வு
செய்திருப்பது கதையின் ஓட்டத்தோடு நம்மையும் இணையாக ஒன்ற வைத்து கதை மாந்தரோடு அடையாளப்படுத்தி
ஆசுவாசப்பட வைக்கிறது உதாரணமாக, இயற்கை நிகழ்வுகள், பார்த்த முகங்கள் போன்ற கதைகள் மூட நம்பிக்கைகளை சாடுகின்றன. பல சிறுகதைகளில் பெண்ணுரிமைக்கான முன்மொழிவுகள்
அழுத்தமாக முன்வைக்கப்படுகின்றன.
இச்சிறுகதைகள் வண்ணக்கதிர், செம்மலர், புதிய ஆசிரியன், இளைஞர் முழக்கம், தினமணி கதிர், தங்க மங்கை போன்ற இதழ்களில் வெளிவந்திருப்பவை. பல படைப்புகள் பரிசுகளை
வென்றிருப்பவை. மொத்தத்தில் `பார்த்த முகங்கள் சிறுகதைத் தொகுப்பு வாசித்து, நேசிக்கத் தக்க படைப்பாகும்.
- கவிஞர் சாகித்யா சேவியர் (செல் : 9659033444)
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.